குடியரசுத் தலைவர் தேர்தல் : எதிர்க்கட்சி பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு, அசாதுதீன் ஒவைசி ஆதரவு.! - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்காவிற்கு அசாதுதீன் ஒவைசி மஜ்லிஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவிற்கு அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்  கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asaduddin Owaisi support to yashwant sinha


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->