அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய சர்ச்சை... இரு கட்சிகளிடையே வார்த்தை போர்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த இருவரும் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி "ஒருங்கிணைந்த அதிமுகவால் தான் தீய சக்தி திமுகவை தோற்கடிக்க முடியும் என தெரிவித்தனர். எனவே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும்  என்பதை பாஜகவின் நிலைப்பாடு" என செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் "அதிமுக என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு நீங்கள் யார்? தேசிய கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதால் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிடலாமா? கர்நாடக பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுரை கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா? திமுகவை எதிர்த்து தனித்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத பாஜக 30 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திய அதிமுகவுக்கு அறிவுரை கூறுவது நியாயமா? உங்களது வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள்" என பதிவிட்டிருந்தார்.

இதற்கு தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி தந்துள்ளார். சிங்கை ராமச்சந்திரனின் பதிவை ரீட்விட் செய்த அவர் "எல்லாம் தெரியும் என்றால் பின்னால் எதற்கு 2017 இல் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அதை நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்? 

திரு சி.டி ரவி அவர்கள் கூறியது எங்களுடைய கருத்து தானே தவிர முடிவு எடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது'' என பதிலடி தந்துள்ளார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் அதிமுக பாஜக நிர்வாகிகளிடையே நேரடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Argument between AIADMK and BJP on social media


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->