சட்டவிரோதமானது.. பாஜகவின் நோக்கம் இது அல்ல.. கொந்தளிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ௩ முறை சம்மன் அனுப்பியும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாததால் இன்று அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில் "என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை" என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் " என் மீது பொய்யாக வழக்கு புனரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மூலம் என்னை கைது செய்ய பாஜக முயற்சி செய்கிறது. ஊழல் எதுவும் நடக்கவில்லை என்பது தான் உண்மை.

எனது மிகப்பெரிய சொத்து எனது நேர்மை. அதை அவர்கள் சிதைக்க நினைக்கிறார்கள். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார்கள். பாஜகவில் சேராத அரசியல் தலைவர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது. பாஜகவின் நோக்கம் விசாரிப்பது அல்ல. மக்களவை தேர்தலுக்கு என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுப்பதே. விசாரணை என்ற பேரில் என்னை கைது செய்ய விரும்புகின்றனர்" என  குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aravind kejriwal allegate BJP aim is not to investigate me


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->