செந்தில் பாலாஜியை நீக்காமல் ஊழலுக்கு துணை போகிறீர்களா..? பேசுங்க முதல்வரே பேசுங்க..!! சாட்டை சுழற்றும் அறப்போர் இயக்கம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்று தருவதாக கூறி சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்த நிலையில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் பணம் திருப்பி கொடுக்கப்பட்டதால் இந்த வழக்கை புகாரர்கள் வாபஸ் பெற்றனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறையின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை ரத்து செய்து உத்தரவிட்டது.

 

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை வாபஸ் பெற்றது மற்றும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அனைத்து தீர்ப்பகளையும் ரத்து செய்ததோடு 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. மேலும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு புதிதாக சம்மன் அனுப்பி விசாரணை தொடலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பிறகு செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இடம் பெற்றால் விசாரணை முறையாக நடைபெறாது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அறப்போர் இயக்கம் செந்தில்பாலாஜியின் ஊழலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் துணை போகிறீர்களா.? என கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கத்தின் டுவிட்டர் பக்கத்தில் "அரசு வேலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு கடந்து வந்த பாதை இதுதான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன.?

தன்னுடைய அமைச்சரவையில் சக்தி வாய்ந்த துறைகளில் அமைச்சராக இருப்பவரை தன்னுடைய பொறுப்பில் இருக்கும் காவல்துறை எப்படி விசாரிக்க போகிறது என்று தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துவாரா.? எத்தனை ஊழல் விசாரணைகள் வந்தாலும் அமைச்சராக பதவி கொடுத்து பார்ப்பேன் என்பது தான் முதல்வரின் அமைதிக்கு அர்த்தமா.? பேசுங்க முதல்வரே பேசுங்க.

தமிழக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கேள்வி:: 

மாநிலத்தின் இரண்டு முக்கிய துறைகளை நிர்வகிக்கும் சக்தி வாய்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக காவல்துறை எப்படி தைரியமாக விசாரிப்பார்கள்.?

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவரை வழக்கு விசாரணையை சந்திக்க உத்தரவு போடுவீர்களா..? 

உச்சநீதிமன்றம் விசாரணையை தொடரலாம் என்று தெரிவித்த பிறகு வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சராக நீடிக்க அனுமதிக்கும் நீங்களும் அவருடைய ஊழலுக்கு துணை போகிறீர்களா.? என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor iyakkam questioned minister Senthil Balaji corruption case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->