சுமூகம் தான் ஆனால்... முடிவு அவங்க கைல... பாஜகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஜெயக்குமார் தகவல்...!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி ஹரி வெளியானதில் இருந்து அரசியல் களத்தில் பரபரப்பு தோற்றுக் கொண்டது. திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளதால் வேட்பாளருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்துள்ளதால் பல்வேறு அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருகின்றன.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோன்று பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் ஜி.கே வாசன் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். இந்த நிலையில்  அதிமுக கூட்டணியில் இருந்த பாமக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை மற்றும் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்துவிட்டது. 

தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. எங்கள் தரப்புக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டு உள்ளோம். அவர்களின் நிலைப்பாட்டை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தான் அறிவிப்பார்" என பதிலளித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புரட்சி பாரதத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை நடத்தியபோது உடனுக்குடன் முடிவு எட்டப்பட்ட நிலையில் தமிழக பாஜகவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் தமிழக பாஜக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai will announce support admk for Erode byelections


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->