அதிரடி நீக்கம்... பாஜக ஆலோசனைக் கூட்டத்தின் நடுவே வெளியான பரபரப்பு அறிக்கை...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "சென்னை மேற்கு மாவட்டத்தில் 29/01/2023 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்ற பொழுது கட்சியின் பொறுப்பாளர்கள் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடரும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது'' என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியலில் மாநில செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

தற்பொழுது பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நெசவாளர்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில் தமிழக பாஜகவின் நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai suspended 5 admins from tnbjp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->