ஸ்பா'வில் பாஜக நிர்வாகி செய்த சில்மிஷம்! வெளியான பரபரப்பு ஆடியோ! ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒரு பெண்ணிடம் ஸ்பா லைசன்ஸ் பெற்று தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டியதோடு, அந்த பெண்ணின் ஸ்பாவிற்கு சென்று அங்குள்ள பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. 

குறிப்பாக இந்த விவகாரத்தில் பாஜக அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கர், திருவள்ளூர் கிழக்கு பாஜக மாவட்ட தலைவர் செந்தில்குமார், திருவள்ளூர் கிழக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் பொன் பாஸ்கர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான ஆடியோ கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பாஜக நிர்வாகிகள் மீது மாநில தலைவர் அண்ணாமலை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரலும் எழுந்தது. 

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி உத்தரவிட்டு உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தினை சார்ந்த கீழ்க்கண்ட நிர்வாகிகள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து முழுமையாக அறிக்கையை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வைக்கப்படுகிறார்கள் என திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் பொன் பாஸ்கரன், முத்துக்குமார் ஆகியோரை தற்காலிகமாக நீக்கி உள்ளார். 

அதே போன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ராஜசேகர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai removed tiruvallur district BJP officials from the party


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->