நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிள் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ள நீர் மெல்ல மெல்ல வடிய தொடங்கியதால் திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்புநிலை திரும்புகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேற்று மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழத்தில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழத்திற்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai met with Nirmala Sitharaman


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->