தமிழக அமைச்சர்கள் இடையே ஊழல் செய்வதில் போட்டா போட்டி..!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


விக்ரம் சம்பத் என்பவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த விழாவில் பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலளித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை தமிழக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

அப்போது பேசிய அவர் "ஊழலிலே நான் பெரியவனா நீ பெரியவனாய் என பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதில் திமுக அமைச்சர்கள் இடையே போட்டி இல்லை, ஊழல் செய்வதில் தான் போட்டி உள்ளது. 

தற்பொழுது அந்தப் போட்டியில் பத்திரப்பதிவுத்துறை முதல் இடத்தில் உள்ளது. ஒரு சாதாரண மனிதர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று பத்திரத்தை பதிவு செய்ய முடியாத சூழல் உள்ளது. இதில் சாமானிய மக்களுக்கு எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும்" என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai critized competition between TN ministers in corruption


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->