அடேங்கப்பா.!! ஆண்டுக்கு ₹2000 கோடி ஊழலா.? உதயநிதிக்கு லிங்க்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திமுக ஆட்சியில் நடைபெற்ற மூன்று ஊழல் குறித்து ஆதாரங்களுடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் முதல் பாதியில் அரசு நிறுவனமான எல்காட் நிறுவனம் தனியார் வசம் சென்றது குறித்தான பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். 

போக்குவரத்து துறை ஊழல்:

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஊழல் குறித்தும் அந்த காணொளியில் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக வணிக பயன்பாட்டு வாகனங்களில் விநியோகிஸ்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து இடம் பெற்றிருந்தது. அதில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி REFLOMAX,  RAATANJEY&CO, MNTECH, DIGICOP ஆகிய நிறுவனங்களுக்கும், 2022 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி AVERY, TRACOLE TECHNOLOGIES ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்த ஒரே நாளில் விநியோகிஸ்தர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே சான்றிதழ் வழங்கும் வலைதளத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வலைதளத்தை உபயோகிப்பவர்கள் மற்றும் அலுவலகங்களின் விவரங்கள் என அனைத்தும் APM groups நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அந்த நிறுவனங்களுக்கு போக்குவரத்து துறையில் தொடர்போ, முன் அனுபவமோ எதுவும் இல்லை. சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ளதாக கூறப்படும் DIGICOP நிறுவனம் போலியானது. ராஜபாளையத்தில் அமைந்துள்ள RAATANJEY நிறுவனமும் போலியானது. 

வணிகத்தின் மொத்த அளவு:

1)தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை - 2.5 கோடி

2) ஒவ்வொரு ஆண்டும் தரச் சான்றிதழ் தேவைப்படும் வாகனங்களின் எண்ணிக்கை - 30 லட்சம்

3) வாகனங்களுக்கு தேவைப்படும் reflection tapes-இன் சராசரி அளவு - 33 மீட்டர்

4) ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் மொத்த reflection tips-இன் அளவு - 30 லட்சம் * 33 மீட்டர் = 9.9 கோடி மீட்டர்.

5) கனரக வாகனங்களின் எண்ணிக்கை - 18 லட்சம்

6) ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் Rear marking plate-இன் எண்ணிக்கை - 18 லட்சம் தொகுப்புகள்

வியாபார மதிப்பு:

1) ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் Reflection tapes-இன் அளவு - 9.9 கோடி மீட்டர்

2) Reflection tapes-இன் விலை மீட்டருக்கு ரூ.150

3) ரிப்லெக்ஷன் டேபின் விற்பனை மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம்-  9.9 கோடி * ரூ.150 ரூ=1485 கோடி

4) ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் Rear marking plate எண்ணிக்கை - 18 லட்சம் தொகுப்புகள்

5) Rear marking plate விலை - தொகுப்புக்கு ரூ.1500

6) Rear marking plate விற்பனை மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் - 18 லட்சம்* ரூ.1500 = ரூ270 கோடி

மொத்த வருமானம் - ரூ.1485 கோடி + ரூ.270 கோடி = ரூ.1755 கோடி

மொத்த லாபம்:

REFLECTION TAPES:

உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் விலை - ரூ.44

வாகன உரிமையாளருக்கு விற்கப்படும் விலை - ரூ.150

நிகர லாபம் - ரூ.106

ஆண்டுக்கு 9.9 கோடி மீட்டர் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் - ரூ. 1050 கோடி

REAR MARKING PLATE:

உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் விலை - ரூ.240

வாகன உரிமையாளருக்கு விற்கப்படும் விலை - ரூ.1500

மொத்த லாபம் - ரூ.1,260

ஆண்டுக்கு 18 லட்சம் தொகுப்புகள் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் - ரூ.226

ஆண்டுக்கு நிகர லாபம் ரூ.1050 கோடி + ரூ.226 கோடி = ரூ.1276 கோடி

போக்குவரத்து துறையில் கருவி வாங்கியதில் ஊழல்:

வேக கட்டுப்பாட்டு கருவி - 4.75 லட்சம் * 500 = ரூ.23.75 கோடி

இடம் கண்காணிப்பு கருவி - 7.5 லட்சம் * 500 = ரூ.150 கோடி

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் -

      பயணிகளல்லா வாகனங்கள் - 2.78 கோடி * 500 = ரூ.257.25 கோடி

      பயணிகள் வாகனங்கள் - 7.5 லட்சம் லட்சம் *200 = ரூ.15 கோடி

மாசு அளவீடு கருவிகள் -

     பெட்ரோல் பங்க் ரூ.15 கோடி

     இருசக்கர வாகனங்கள் ரூ.3.6 கோடி

     நான்கு சக்கர வாகனங்கள் ரூ.95 லட்சம்

கண்காணிப்பு கேமரா 1.5 லட்சம் வாகனங்களுக்கு ரூ.18 கோடி

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: 

பெரும்பாலான வாகனங்களுக்கு ரொக்கம்மாக பணம் வாங்கப்பட்டு தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு ஹவாலா முறையில் விநியோகிக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு reflection tapes மற்றும் rear marking plates விற்பனை மூலம் கிடைத்த மொத்த வருமானம் ரூ.1755 கோடி. வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய 18% ஜிஎஸ்டி தொகை ரூ.316 கோடி. பினாமி நிறுவனங்கள் வரி ஏய்ப்பில்  ஈடுபட்டுள்ளன. இதுபோல ஆண்டுக்கு சுமார் ரூ.2000 கோடி வசூலித்து உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைப்பது தான் போக்குவரத்து துறை அமைச்சர் S.S சிவசங்கரின் வேலை என்பது எங்களின் குற்றச்சாட்டு.

இதற்கு பிரதிபலனாக அமைச்சர் எஸ்.ஏ சிவசங்கரின் மனைவி டாக்டர் திருமதி S.S காயத்ரி தேவி அவர்களது நிறுவனமான ரோஸ் ஃபெர்டலிட்டி மருத்துவமனை அரசு போக்குவரத்துகளின் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai alleges ₹2000 crores per year corruption in TNSTC


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->