தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்கவே இந்த நடைபயணம் - அமித்ஷா.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராமேஸ்வரத்தில்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாரதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் என் மண் என் மக்கள் எனும் பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அண்ணாமலை பாதயாத்திரை நடத்த உள்ளார். அதன்படி 16 நாட்களில் 1700 கிலோ மீட்டர் நடை பயணம், 900 கிலோ மீட்டர் வாகன பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதில், தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, என் மண் என் மக்கள் நடை பயணம் அரசியல் சார்ந்தது அல்ல. தமிழக கலாச்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் நடைபயணம். தமிழ்நாட்டை உலகில் இருந்து விடுவிப்பதற்காக நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டும். இவர்களுக்கு இந்தியாவையோ, தமிழ்நாட்டையோ வளப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. உலகின் மிக பழமையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். தமிழரின் பெருமையை உலகறிய செய்தவர் நம்முடைய பாரத பிரதமர் மோடி. பிரதமர் மோடி நாட்டுக்காக உழைக்கிறார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitsha speech in En Man En Makkal rally


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->