வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் பணியாற்றுகிறது - பாஜக அமித் ஷா.! - Seithipunal
Seithipunal


இந்தியா ஒரு தேசம் கிடையாது என சொன்னவர்கள் தற்போது இந்தியாவை ஒன்றுபடுத்துங்கள் என்ற கோஷத்துடன் வெளிநாட்டு டி- ஷர்ட் அணிந்தபடி யாத்திரை செல்வதாக அமித்ஷா விமர்சித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி வாக்குவங்கி அரசியலிலும் திருப்தி படுத்தும் அரசியலில் மட்டுமே ஈடுபடுவதாக உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் வாக்குச்சாவடி மட்டத்திலான கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா பேசியதாவது,

ராகுல் காந்தியும் பிற காங்கிரஸ் தலைவர்களும் பாராளுமன்றத்தில் பேசியதை நினைவுகூர நான் விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார். எந்த புத்தகத்தில் இதை ராகுல் காந்தி படித்தார் என்று தெரியவில்லை.

 லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து உருவாக்கிய தேசம் இதுவாகும். இந்தியா ஒரு தேசம் கிடையாது என சொன்னவர்கள் தற்போது இந்தியாவை ஒன்றுபடுத்துங்கள் என்ற கோஷத்துடன் வெளிநாட்டு டி ஷர்ட் அணிந்தபடி யாத்திரை செல்கிறார்கள்.

 ராகுல் காந்தி இந்திய வரலாற்றை முதலில் படிக்க வேண்டும். காங்கிரஸ் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்கும் திருப்திபடுத்தும் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பணியாற்றுகிறது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitsha speech about Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->