முஸ்லிம் இட ஒதுக்கீட்டை நீக்கிய பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.. அமித் ஷா வேண்டுகோள்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்காக வழங்கப்பட்ட 4% இட ஒதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் இஸ்லாமியர்களை 10% இட ஒதுக்கீட்டு பிரிவில் மாற்றியது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த இஸ்லாமியர்களை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுக்கு மாற்றியதால் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

மேலும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4% இட ஒதுக்கீட்டை ஒக்கலியர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதலாக தலா 2% பகிர்ந்து அளிக்கப்படும் என பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தேர்தல் முடியும் வரை இட ஒதுக்கீடு விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் நாளையுடன் அங்கு பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிறுகொடி பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.

அந்த கூட்டத்தில் பேசிய அவர் "பாஜக 4% முஸ்லிம் இட ஒதுக்கீட்டை நீக்கியது. இதன் காரணமாக எஸ்சி/எஸ்டி மற்றும் லிங்காயத்துகள் பிரிவதற்கான இட ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு 6% இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என உறுதி அளித்துள்ளது. இதனால் லிங்காயத்துக்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்படும். ஆனால் கர்நாடக மக்கள் இதை விரும்பவில்லை. எனவே அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah requests BJP to vote for removal of Muslim reservation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->