பரபரப்பில் அதிமுக.."ஒரே நாளில் இரு வழக்குகள்"..உயர் நீதிமன்றங்களில் இன்று விசாரணை..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில் இன்று முன்கூட்டியே விசாரணைக்கு வர உள்ளது. 

அதேபோன்று அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட உட் கட்சி பூசல் காரணமாக மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடைக்காலம் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் உட்பட அனைத்து ஆவணங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதனை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களின் அடிப்படையில் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. ஒரே நாளில் இரு வழக்குகள் விசாரணைக்கு வர இருப்பதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK two cases hearing today in different high courts


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->