பழனிச்சாமியின் இறுதி முடிவு இதுதான்! பியூஷ் கோயலை சந்தித்த தம்பிதுரை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சசிகலா, தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை இணைத்து தேர்தலில் களம் காண பாஜக நினைக்கிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்து வராததால் சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரைக்கு வந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ் அருகே நின்று பழனிச்சாமி வரவேற்றதாக செய்திகள் வெளியாகின. 

இந்த சம்பவம்  அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. மேலும் சில மூத்த நிர்வாகிகள் சிலர் பழனிச்சாமியிடம் பன்னீர்செல்வம் அருகில் நீங்கள் நின்று இருக்கக் கூடாது என நேரடியாகவே கூறியுள்ளதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக தான் பழனிச்சாமி இன்று காலை அமித் ஷாவை நான் ஏன் சந்திக்க வேண்டும்? அமித் ஷா தமிழகம் வரும்போது எல்லாம் நான் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை இன்று மாலை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த தம்பிதுரை எடப்பாடி பழனிச்சாமி சொன்னதன் பெயரில் பியூஸ் கோயலை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக இடையே உள்ள கூட்டணி முறிவு பற்றி பேசி இருக்கலாம் அல்லது ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை சேர்க்க முடியாது என்பது தான் பழனிச்சாமியின் இறுதி முடிவு என தம்பிதுரை மூலம் இபிஎஸ் சொல்லி அனுப்பி இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Thambidurai meet Union Minister Piyush Goyal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->