ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாக... ஜி.கே வாசனை சந்தித்த அதிமுக நிர்வாகிகள்..!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா சில தினங்களுக்கு முன்பு காலமானதை அடுத்து சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பமான தாக்கல் வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்படும் என பரவலாக பேசப்படுகிறது. அதேபோன்று அதிமுக கூட்டணியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இளைஞரணி தலைவர் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமாக தலைவர் ஜி கே வாசன் நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமாகவுக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் அணி வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன. இதனால் அதிமுக மற்றும் தமாக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனை அவரது அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நேரில் சென்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி ஒதுக்கீடு குறித்து முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமாக போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK officials consult with GK Vasan on Erode by elections


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->