கர்நாடகாவை போல்..! தமிழ்நாட்டிலும் "வாக்காளர் விவரங்கள் திருட்டு"..பகீர் கிளப்பும் அதிமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


திமுக உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் வாக்காளர் அடையாள விவரங்களை சேகரிப்பது எதற்கு?

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் அறிவிப்பாக தமிழக முழுவதும் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்ததோடு 2 கோடி உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திமுக சார்பில் "உடன்பிறப்பாய் இணைவோம்" என்ற திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த திட்டமிட்டு அதற்கான பிரத்தியேக இணையதளமும் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வாயிலாக எவ்வாறு திமுக உறுப்பினராக இணைவது குறித்தான வீடியோவை திமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்பொழுது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த வீடியோவில் "உடன்பிறப்பாய் இணைவோம் என்ற இணையதளத்தில் உள்ளே நுழைந்தவுடன் உறுப்பினராக இணைய விரும்புவோர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்ட உடன் வாக்காளரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தானாக நிரம்பிவிடும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக செயல்படும் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் திமுக இணையதளத்தில் வாக்காளரின் பெயர் தானாக பதிவாகுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866; பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) உள்ளனர். இவர்களில் திமுக உறுப்பினர் சேர்க்கையில் இடம்பெறாத பொது வாக்காளர்கள், பிற கட்சிகளின் வாக்காளர்கள் மற்றும் உறுப்பினர்களின் விவரங்களை திமுக சேகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் பொதுமக்களின் ஓட்டுரிமை சுதந்திரம் மறைமுகமாக அச்சுறுத்த முயல்வது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் பாதுகாக்கப்படும் வாக்காளர்களின் விவரம் திமுக உறுப்பினர் சேர்க்க இணையதளத்தில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது" என தேர்தல் ஆணையத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் "கடந்த வருடம் கர்நாடகாவில் வாக்காளர் தகவல்கள் திருடப்பட்டதாக அந்த தகவல் மூலம் பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் வாக்காளர் அடையாள விவரங்களை சேகரிப்பது எதற்கு..? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK accuses DMK of collecting voter details


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->