சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை தாக்கல் செய்கிறார். முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையாக பட்ஜெட் இதுவாகும். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவர் அறையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சி சார்பில் எழுப்ப வேண்டிய கேள்விகள், சிறப்பு கவன ஈர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ் பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு, பால் பொருட்கள் விலை உயர்வு, நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mlas meeting in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->