உச்சகட்ட பரபரப்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ்.. இன்று இறுதிக்கட்ட தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே, ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். மேலும் முக்கிய திருப்பமாக கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், சுமார் 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவின் இந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு அதிமுக எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலை தொடரும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி கே பழனிசாமி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (செப்., 2) சென்னை உயர்நீதிமன்றம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK final judgement today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->