நாடாளுமன்ற தேர்தல் || இன்று முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் 2 வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. 

இதில், தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ. 20 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரமும் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk application form distribution from today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->