#TNRains || மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமனம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது, இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோரை பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.


மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஞான திரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் ஏவா வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன், மூர்த்தி ஆகியோரை நியமித்து தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 additional ministers appointed to speed up recovery and relief work


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->