சென்னை மாநகராட்சியில் 2,670 பேர் போட்டி.. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, கடந்த 4ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் கடந்த ஐந்தாம் தேதி பரிசீலனை செய்யப்பட்டது.

நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற நேற்று கடைசி நாள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, நேற்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 2,670 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2670 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த 3 ஆயிரத்து 546 பேரில், 633 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். இறுதியில் 243 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஆகையால், தற்போது சென்னை மாநகராட்சியில் 2ஆயிரத்து 670 பேர் களத்தில் உள்ளனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி திமுகவுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. பாமக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2670 candidate for chennai corporation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->