தயிர் எந்தெந்த நேரங்களில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.? - Seithipunal
Seithipunal


பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் முக்கியமான உணவுப்பொருள் தயிர். அந்த வகையில் தயிரில் உள்ள மூலக்கூறுகள் செரிமானத்திற்கு உதவுகிறது. 

தயிரை நாம் பல வித உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சாதம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. செரிமானத்திற்கு உதவுவது முதல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை தயிர் முக்கிய உணவுப் பொருளாக உள்ளது.

அந்த வகையில் வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தயிர் போன்ற உணவு பொருட்களை சாப்பிடலாம். தயிரில் அதிக கால்சியம் உள்ளதால் அதனை சாப்பிடும் போது எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு செரிமான மண்டலமும் சீராக வைக்கிறது.

மேலும், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. அந்த வகையில் தயிரை இரவு நேரத்தில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி ஒரு வேளை தயிரை சாப்பிட வேண்டுமெனில் மோராக குடிக்கலாம்.

மேலும், பகல் நேரத்தில் தயிர் சாப்பிடும் போது சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே இரவு நேரத்தில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத்தூளை சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக வைக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து பச்சடி போன்று தயிரை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கிறது.

தயிரில் இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய இரண்டு சுவைகளும் இருப்பதால் இரவு நேரத்தில் சாப்பிடும் போது நாசிப் பாதையில் சளி உருவாக வாய்ப்புள்ளது. சளியை ஊக்குவிக்கும் தன்மை இருப்பதால் ஆஸ்துமா, இருமல் மற்றும் சளி பிரச்சனை உள்ளவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Which time to ate curd


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->