உப்மா மீந்து போனால், இனி குப்பையில் போடாதீர்கள்.! இப்படி செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


ரவா உப்புமா மிஞ்சி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவை கலந்து வடை போன்று தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் ருசியாக இருக்கும்.

பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் பச்சை மிளகாயுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, இறுக மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்.

முள்ளங்கி, காலிஃப்ளவர் போன்ற காய்களில் உள்ள இலைகளைப் பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சுவையாக இருக்கும். சூப் செய்தும் சாப்பிடலாம்.

பிஸ்கட்டுகள் நமர்த்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரைப் போட்டு மூட்டை போல் கட்டி, பிஸ்கட் இருக்கும் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்

வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

பால் பவுடரைச் சற்று வெதுவெதுப்பான நீர் விட்டுக் குழைத்து, நான்கு வித பழங்களை நறுக்கி, இத்துடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்தால் சுவையான மில்க் ஃப்ரூட் சாலட் தயார்.

சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் பீட்ரூட்டை பிழிந்து அதன் சாற்றை எடுத்து தடவினால் விரைவில் குணமாகும்.

புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் வராது.

கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புச் சேர்த்து தாளிப்பதற்கு பதிலாக நிலக்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

ஆரஞ்சு பழத்தோலை பொடியாக நறுக்கி, அதனுடன் பச்சை மிளகாய் வதக்கி வத்தல் குழம்பில் கலந்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

எள்ளு மட்டன் குழம்பு செய்வதற்கு வேக வைத்த மட்டனை சேர்த்தப் பிறகு, ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளையை அதனுடன் சேர்த்தால் குழம்பு கூடுதல் சுவையாக இருக்கும்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

waste upma recipe in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->