'கிளியர் ஸ்கின்' உங்களுக்கு வேண்டுமா.?! அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே தயாரிக்கப்படும் ஒரு ஃபேஸ் பேக் மூலம் முகத்தில் ஏற்படும் வடுக்களுக்கு எளிதில் தீர்வு காணலாம். அந்த ஃபேஸ் பேக் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்:

தேவையான பொருட்கள் :

வாழைப்பழத் தோல்   - 1/2
கறிவேப்பிலை             - 10
தக்காளி சாறு               -  2  ஸ்பூன்
தயிர்                                - 1  டேபிள் ஸ்பூன் 
முல்தானிமட்டி பவுடர் - 1  ஸ்பூன் 

செய்முறை :

மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வாழைப்பழத்தின் பாதி தோல் கறிவேப்பிலை பத்து இலைகள் இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வருமளவிற்கு மையாக அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை ஒரு பவுலில் மாற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் முல்தானி மட்டி பவுடரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

பயன்படுத்தும் முறை :

தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு   இந்த பேஸ்டை அப்ளை செய்து அரை மணி நேரம் உலர விட்டு முகத்தை நன்றாக கழுவியப் பின் உறங்கச் செல்லலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பளிச்சென்று பொலிவுடன் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

try this home made facial to remove the scars from pimples


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->