லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.. ஈசியா டேஸ்சிய செய்யக்கூடிய கேரட் ரெசிபி.! - Seithipunal
Seithipunal


கேரட் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இன்று ஆரோக்கியமான கேரட் சாதம் செய்வது எப்படி? என்பதனை இங்கே காணலாம். 

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கப்,
துருவிய தேங்காய் - 1 கப்,
பச்சை மிளகாய் - 1,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு,
வேர்க்கடலை - 5 ஸ்பூன்,
வெந்தயம் - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு வேர்க்கடலை, இஞ்சி, பூண்டு விழுது, கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து, சாம்பார் பொடி, கரம் மசாலா, தேங்காய் சேர்த்து சமைக்கவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு, ஒரு கப் அரிசியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ஆரோக்கியமான கேரட் சாதம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty carrot rise tips


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->