10 நிமிடத்தில் ஸ்னாக்ஸ் செய்யணுமா? உருளைக்கிழங்கு இருந்தால் மட்டும் போதும்.!! - Seithipunal
Seithipunal


10 நிமிடத்தில் ஸ்னாக்ஸ் செய்யணுமா? உருளைக்கிழங்கு இருந்தால் மட்டும் போதும்.!!

கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மற்ற உருளைக்கிழங்கை நறுக்கி பயன்படுத்துவார்கள். இந்த உருளைக்கிழங்கை வைத்து வறுவல், சிப்ஸ், என்று அனைத்தும் செய்வார்கள். இப்போது, பேபி உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது? என்று இந்த பதிவில் பார்ப்போம். 

தேவையான பொருள்கள்:

பேபி உருளைக் கிழங்கு - 1 கிலோ, வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 4, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி, மல்லித்தூள் - 3 தேக்கரண்டி, இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,  கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உப்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

முதலில், உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.

அதில் இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம் இரண்டையும் போட்டு நன்கு வதக்கி அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு உருளைக் கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.

அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள், உப்பு என்று அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும். உருளைக்கிழங்கு நன்கு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித் தழை தூவினால் போதும். சுவையான ஈவினிங் சிநாக்ஸ் ரெடி.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe of potato chips


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->