வீட்டிலேயே தயாரிக்கலாம்.. அலர்ஜி தராத குங்குமம்.. இப்போதே ட்ரை பன்னுங்க.!  - Seithipunal
Seithipunal


குங்குமம் நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள். இதை அதிகமாக கோவில்கள்,  வீட்டு விசேஷங்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கு என அதிகம் பயன்படுத்தும் ஒரு பொருள் குங்குமமாகும்.

ஆனால் இந்த குங்குமம் ஒரு சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி அலர்ஜி, எரிச்சல் உண்டாக்கும். குங்குமம் வைத்த இடத்தில் கருமை நிறமாகவும், பருக்களும், தோன்றும். நாம் கடைகளில் வாங்கும் குங்குமம் இவ்வாறு  ஏற்படுத்தும். நாம்  வீட்டிலேயே குங்குமம் தயாரிக்கலாம்.

அதற்கு தேவையான பொருட்கள் :

மஞ்சள் தூள் 100 கிராம், 

படிகாரம் - 50 கிராம், 

வெண்காரம்- 50 கிராம், 

எலுமிச்சை பழம் - ஆறு, 

நல்லெண்ணெய் - தேவையான அளவு, 

ஒரு பாத்திரத்தில் வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பின் எலுமிச்சம் பழ சாறு எடுத்து அந்த சாறையும் இதனுடன் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். 

தண்ணீர் சேர்க்கக்கூடாது, பின்னர் 2 மணி நேரம் கழித்து, இதனுடன் நல்லெண்ணெய் 15 ஸ்பூன் சேர்த்து பிசைந்து இதை அகலமான, சுத்தமான பாத்திரத்தில் கொட்டி மூன்று நாட்கள் வரை காய வைக்கவும்.

இந்த கலவையை நன்கு காய வைத்து ஈரப்பதம் சுத்தமாக இல்லாமல் வந்தவுடன் எடுத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளவும், இப்பொழுது சுத்தமான குங்குமம் தயார். இதை தினமும் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumkum powder home preparation


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->