கர்ப்பிணி பெண்களுக்கு இன்றியமையாத உளுந்தங்களி.! எளிமையாக செய்யலாம் வாங்க.!  - Seithipunal
Seithipunal


உடலுக்கு வலிமையை தரும்... உளுந்தங்களி:

உளுந்தங்களி மிக மிக ஆரோக்கியமான உணவாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் உணவாக இருக்கிறது.

பாரம்பரியமாக இதை வெல்லம் மற்றும் நல்லெண்ணெய் உடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். குறிப்பாக ஊர்களில் பெண்கள் பருவமடைந்த போது இந்த உளுந்தங்களியை நம் முன்னோர்கள் கொடுப்பர்கள்.

இந்த பதிவில் உளுந்தங்களி செய்வது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...!

தேவையான பொருட்கள் :

உளுந்து - 3/4 கப்

ஏலக்காய் - 2

பச்சை அரிசி - 2 ஸ்பூன்

கருப்பட்டி (அ) வெல்லம் - 3/4 கப்

நல்லெண்ணெய - 3 ஸ்பூன்

செய்முறை :

உளுந்தையும், அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். கூடவே ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும். பின்பு ஆறியபின் மிக்சியில் நைசான மாவாக அரைக்கவும். 

பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் (அ) கருப்பட்டி சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதித்த கருப்பட்டி பாகை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைக்கவும். 

பிறகு அரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு கரண்டி கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.

மேலும் 1\4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும். 

இடை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும்.

கிண்டும் பொழுது ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

களி வெந்து ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் கையை தண்ணீரில் நனைத்து களியை தொட்டுப்பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

இப்போது ஆரோக்கியம் மிக்க உளுந்தங்களி ரெடி!

குறிப்பு :

உளுந்தும், அரிசியும் வறுக்கும் பொழுது மிதமான தீயில் வறுத்தால் தான் கருகாமல் முழுவதும் வறுபடும்.

எண்ணெய் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.

உருண்டைகளாக உருட்டியும் அல்லது அப்படியேவும் கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம்.

பலன்கள் :

உளுந்தங்களி நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு உகந்தது.

உளுந்தங்களி இடுப்பு வலிக்கு சிறந்தது. மேலும் எலும்பு வலுவடையும்.

உளுந்தங்களியில் அதிக புரதங்கள் உள்ளன.

உளுந்தங்களியை சாப்பிட்டால் செரிமானத்தை மேம்படுத்தும். 

கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடுவதால் அவரது எலும்புகளும், தசைகளும் பலமடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare ulundhangali for women


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->