சட்னி போரடிக்குதா ? டக்குனு இட்லிக்கு சுவையான சோம்பு குழம்பு இப்படி செஞ்சு பாருங்க ! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2 
தக்காளி - 3 
பச்சை மிளாகாய் - 3 
கொத்தமல்லி - 1  கொத்து 
பூண்டு - 5 
சோம்பு - 1 1/2  டீ ஸ்பூன் 
கடுகு உளுந்து - 1/2  டீ ஸ்பூன் 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
பொட்டுக்கடலை - 25 கிராம்
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 3 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு  

செய்முறை :

ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, தக்காளி, பச்சைமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்த்து பொரிந்ததும் பட்டை கிராம்பு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்துவைத்த விழுதை இதனுள் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்துவந்த  பின் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி விட்டு இறக்கினால் சோம்பு குழம்பு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

easy idly sidedish  fennel seed curry receipe


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->