தோசைமாவு புளித்து விட்டதா? இனி கவலை வேண்டாம்..! - Seithipunal
Seithipunal


அரிசியை ஊற வைக்கும்போது ஒரு கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து தோசை வார்த்தால் சத்து நிறைந்த தோசை ரெடி.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சிறிது புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

ரவா தோசை செய்யும்போது சிறிது கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.

தோசை மாவு புளித்துப் போனால் அதில் அதிகமாக தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து மேலே நிற்கும் தண்ணீரை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும்.

அடை செய்யும் போது, பருப்புகளுடன் கொள்ளுப்பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

கொழுப்பையும் கரைக்கும்.

கேரட் மற்றும் பீட்ரூட்டை நன்றாகத் துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லிப்பொடியுடன் சிறிது வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சேர்த்தால் மணமாக இருக்கும். வயிற்றுக் கோளாறுகளுக்கும் நல்லது.

இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு டிஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் சேர்த்து பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

ஒரு டம்ளர் ரவையுடன், ஒரு டம்ளர் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கலந்து தோசை வார்த்தால், பேப்பர் ரோஸ்ட் போல் வருவதுடன், சுவையாகவும் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dosaimavu pulippu preparation in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->