சூப்பரான சிம்பிளான தயிர், தேங்காய் சட்னி.. சட்டுன்னு செஞ்சுடலாம் வாங்க.! - Seithipunal
Seithipunal


நாம் மறந்து போன தேங்காய் தயிர் சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

தேங்காய்,

தயிர்,

இஞ்சி, 

பச்சை மிளகாய், 

தாளிக்க: 

கடுகு, 

உளுத்தம் பருப்பு,

கருவேப்பிலை,

சிவப்பு மிளகாய் 

எண்ணெய்.

செய்முறை :

தயிரை நன்றாக அடித்து தனியாக எடுத்துக் கொள்ளவும். 

பின் மிக்ஸியில் இஞ்சி, தேங்காய், உப்பு, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

இத்துடன், தயிரை சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்து கடுகு வெடித்ததும் கருவேப்பிலையை போட்டு தாளித்து அதில் சட்னியை ஊற்றினால் சுவையான தேங்காய் தயிர் சட்னி தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curd Coconut Chutney preparation in Tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->