கோடைக்கு இதமான கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள உணவு முறைகளில் பெரும்பாலனவை நமது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. இதனால் பலருக்கும் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றி, புதிய இரத்தங்கள் உருவாகி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி இலைச்சாறு செய்வது எப்படி என இன்று காணலாம்.

கொத்தமல்லி இலைச்சாறு செய்யத் தேவையான பொருட்கள்:

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,
தேங்காய் - 1 ,
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை:

எடுத்துக்கொண்ட கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து, தேங்காயுடன் அரைத்து வடிகட்ட வேண்டும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இதனை அடுப்பில் வைத்து சூடாக்கி உபயோகம் செய்ய கூடாது.

கொத்தமல்லி இலைசாயுடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு சேர்த்தும் குடிக்கலாம். மோர் மற்றும் உப்பு சேர்த்தும் குடிக்கலாம்.

நன்மைகள்:

கொத்தமல்லி இலைசாறை பருகி வந்தால் மஞ்சள் காமாலை, கேன்சர் போன்ற நோய்கள் குணமாகும். உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் நீங்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும். கல்லீரல் பலமாகும். பித்தம் கட்டுக்குள் இருக்கும். தினமும் தேநீருக்கு பதிலாக கூட இதனை அருந்தி வரலாம்.

குறிப்பு:

கொத்தமல்லி இலைசாறை குடிக்கும் நாட்களில், பசிக்கும் நேரங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coriander leaf  juice in tamil 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->