உடல் எடையை குறைக்க உதவும், நார்சத்துமிக்க காலிஃபிளவர் சூப்.! 5 நிமிடத்தில் அசத்தலாக செய்யலாம்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் – 1,

மிளகுத்தூள் – சிறிதளவு,

பால் – ஒரு கப்,

பெரிய வெங்காயம் – ஒன்று,

கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,

வெண்ணெய் – தேவையான அளவு,

பூண்டு – 5 பல்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

காலிஃப்ளவரை மிதமான வெந்நீரில் ஊறவைத்து சுத்தம் செய்து பூவை மட்டும் துருவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் காலிஃப்ளவர் தண்டை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

வெங்காயம் மற்றும் பூண்டையும் பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் மற்றும் தண்டு மூன்றையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

பின் கடாயில் வெண்ணெய் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து துருவி வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு வதக்கவும். அதற்கு உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு சேர்த்து பிரட்டவும். 

பின்னர் அரைத்த விழுதை அதில் சேர்த்து கோதுமை மாவை கொட்டி கிளறி, இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் பால் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். 

தேவைப்பட்டால் இதன் மீது சிறிது மிளகுத் தூளை தூவி கொள்ளலாம். இப்போது சூப்பரான காலிஃப்ளவர் சூப் ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cauliflower soup preparation in tamil


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->