உடல் சோர்வா.?! எலும்புகளை வலிமையாக்க வேண்டுமா.?! இதை செய்தாலே போதும்.! - Seithipunal
Seithipunal


மனிதனின் அனைத்து செயலாக்கத்திற்கும் எலும்புகள் பயன்படுகிறது. நடக்க, ஓட, சாப்பிட, வேலை செய்ய என அனைத்திற்கும் உடலிலுள்ள எலும்பு உதவுகிறது. இத்தகைய எலும்புகள் உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். 

இல்லையெனில், நம்மால் எவ்வித வேலையும் செய்ய இயலாமல் போய்விடும். உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றிப்போய் இருப்பதுதான். இதற்கு கால்சியம், வைட்டமின் சத்துக்கள், மெக்னீசியம், புரதம், இரும்பு போன்ற சத்துக்கள் அதிகம் தேவைப்படுகிறது.

முக்கியமாக எலும்புகளில் கால்சியம் சத்துக்கள் இருந்தால் எலும்புகள் பலமாக இருக்கும். இதற்கு பாலாடைக்கட்டி, முட்டை, பால் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறி வகைகளில் காலிஃபிளவர், முட்டைகோஸ், புரோகோலி, கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உலர் பழங்கள், சோயா, ஓட்ஸ், பாதாம், உலர் பருப்பு வகைகள் போன்றவை சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் அதிகரிக்கும். மீன், காளான் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமாக வைட்டமின் டி சத்து அதிகமாக காணப்படும்.

பச்சைக் காய்கறிகள், வாழைப்பழம் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது போன்ற உணவு வகைகளை பின்பற்றுவதன் மூலமாக உடலில் எலும்புகளை உறுதியாக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Born strength tips


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->