அடடே!!! தொப்புளில் மஞ்சள் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? - Seithipunal
Seithipunal


நாம் உணவில் மசாலா பொருளாக பயன்படுத்தும் மஞ்சள்   சிறந்த கிருமி நாசினி. மேலும் இது  உடலில் இருக்கும் நச்சுத்தன்மைக்கு எதிராக போராடுவதோடு  காயங்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால்  சளி தொல்லை நீங்கும் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக அமையும். இந்த மஞ்சளை நம் தொப்புளில் தடவுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன அவை என்ன என்று பார்க்கலாம்.

இரவில் உறங்கச் செல்லும் முன்  மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர அஜீரணக் கோளாறு மற்றும்  வயிற்று வலிக்கு சிறந்த தீர்வாக அமையும். மேலும் இது உடலில் இருக்கும் வீக்கங்களையும் குணப்படுத்தும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு  தீராத வயிற்று வலிமற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற தொந்தரவுகள் இருக்கும். அந்த நேரங்களில் தொப்புளில்  மஞ்சள் தடவி வர  வயிற்று வலி குறைவதோடு வயிற்றுப் பிடிப்பு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக அமையும்.

கிருமி நாசினியான மஞ்சளை 
கடுகு எண்ணெயுடன்  சேர்த்து தொப்புளில் தடவி வர  குளிர்காலங்களில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் ஆகியவை  நம் உடலை தாக்காமல்  நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும்.

உடலில் இருக்கும் அனைத்து நரம்புகளின் மையப் புள்ளியாக விளங்குவது தொப்புள். இவற்றில் மஞ்சள் வைக்கும்போது  அவற்றில் இருக்கக்கூடிய அமிலங்கள்  நரம்புகளின் செயல்பாட்டை தூண்டி  ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கின்றன.  மேலும் இவை  நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக வளர்ச்சிதை மாற்றும் தூண்டப்பட்டு  உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாம் தொப்புளில் மஞ்சளை வைக்கும் போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு  ஓய்வில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் பலனை நமது உடல்  உட்கிரகித்துக் கொள்ள  வசதியாக இருக்கும். அதன் காரணமாக இரவில் உறங்கச் செல்லும் முன்  வயிற்றில் மஞ்சள் வைத்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of applying turmeric in belly button


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->