போக்சோ : விழிப்புணர்வு அவசியம்! பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?! - Seithipunal
Seithipunal


போக்சோ : 

ஆதாரம் இல்லை என்றால் என்ன செய்வது?

குழந்தையிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டார். ஆனால், அதற்கு ஆதாரமாக எந்த புகைப்படமோ, வீடியோவோ, ஆடியோவோ எதுவுமே இல்லை என்று பாதிக்கப்பட்ட குழந்தையும் அவர்களுடைய பெற்றோரும் யோசிக்க வேண்டாம்.

குழந்தையின் வாக்குமூலத்தை வைத்தே போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு தொடரலாம். பிறகு இதற்கான சரியான ஆதாரங்களை சேகரித்து வழங்கலாம்.

தவறு செய்யும் குழந்தைகள்.. பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

நம்முடைய குழந்தை தனது நண்பர்கள் வாயிலாகவோ அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ ஏதாவது ஒரு வகையில் தீய பழக்கங்களுக்கு ஆளாகும்போது பெற்றோர் அதை கண்டித்தால் உடனே அந்த இடத்தில் குழந்தைகளுக்கு பிடிவாதம் அதிகமாகும்.

இப்போது நீங்கள் நிதானமில்லாமல் அவர்களிடம் கோபப்பட்டால் விளைவு நிச்சயம் தவறாகத்தான் முடியும்.

எனவே, உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், குழந்தைகள் திருந்தும் வண்ணம் பொறுமையாக, அன்பாக சொல்லுதல் அவசியம்.

உங்களின் நோக்கம் குழந்தையை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும். உங்களின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக திணிக்கக்கூடாது.

மிக முக்கியமாக.. உங்கள் குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் புரிந்து அதன்படி நடந்துகொள்ளும் வகையில் எடுத்துக் கூறுங்கள்.

நீங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகத்தான் சொல்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நிச்சயம் உங்கள் குழந்தை இன்னும் 10 வருடத்தில், இந்த சமுதாயத்தில் உங்களின் துணையின்றி தன்னிச்சையாக வாழும்போது, நீங்கள் அவர்களுக்கு செய்த இந்த நல்ல செயலை நினைவுகூர்ந்து பெருமிதப்படுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Advice To parents about pocso act


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->