பூவும், பெண்ணும்.! பெண்கள் மட்டும் தான் பூ வைக்க வேண்டுமா.?  - Seithipunal
Seithipunal


அதிக மகசூலும், லாபமும் தரக்கூடிய பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அந்த பூக்கள் பலவும் மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

உலகில், 25 சதவீத மலர்களானது மருத்துவ குணம் கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. மேலும் உடல்நலத்துக்கு நன்மை பயக்கிறது.

பூக்களில் ஒன்றான ரோஜாப்பூ, தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றை குணப்படுத்தும்.

மல்லிகைப்பூ மன அமைதிக்கு உதவும் மற்றும் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

செண்பகப்பூ வாதத்தை குணப்படுத்தும், பார்வைத்திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ செவி கோளாறுகளை சீர்படுத்தும், செரிமான சக்தியை மேம்படுத்தும், காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றை சரிசெய்யும்.

செம்பருத்திப் பூ தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யும், உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

மகிழம் பூ தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட குறைபாடுகளை நீக்கும்.

வில்வப்பூ சுவாசத்தை சீராக்கும். காசநோயை குணப்படுத்தும்.

சித்தகத்திப்பூ தலைவலியைப் போக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம்பூ நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

தாமரைப்பூ தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரிசெய்யும், மன உளைச்சலை நீக்கி அமைதி கொடுக்கும், தூக்கமின்மையைப் போக்கி, சீரான தூக்கத்தை அளிக்கும்.

கனகாம்பரம் பூ தலைவலி மற்றும் தலை பாரத்தை சரிசெய்யும்.

தாழம்பூ, மகிழம் பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ போன்ற மலர்கள் வாதம், கபம் போன்றவற்றை சரிசெய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why girls poo wearing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->