சுவையான 'வெண்டைக்காய் 65' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


 
சுவையான மொறுமொறுவென வெண்டைக்காய் 65 எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 
வெண்டைக்காய் 
கடலை மாவு 
அரிசி மாவு 
சோள மாவு 
கரம் மசாலா தூள் 
மிளகாய் தூள் 
மஞ்சள் தூள் 
கறிவேப்பிலை 
உப்பு 
எண்ணெய் 
எலுமிச்சை சாறு 
இஞ்சி பூண்டு விழுது 

செய்முறை:
முதலில் வெண்டைக்காயை நன்றாக அலசி துணியில் துடைத்துவிட்டு நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பௌலில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் 65 தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vendaikkaai 65 recipe tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->