உடல் கொழுப்பை குறைக்க உதவும் சூரிய முத்ரா..!
Surya muthra for health care
யோகா முத்திரை பயிற்சிக்கு விரல்கள் தான் மூலதனம். உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு,'சூரியமுத்திரை'என்று பெயர். சூரிய முத்திரை எப்படி செய்வது அதன் பலன்கள் என்ன என்று பார்போம்.
எப்படி செய்வது :
விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். பின் மோதிர விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த முத்திரையை சுமார் 15நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை செய்து வரலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கும். இந்த முத்திரை செய்ததும் ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர்தைராய்டு, கல்லடைப்பு, நீர்க்கடுப்பு, வாய்ப்புண், வெள்ளைப்படுதல், கண்சிவப்பு, ஒற்றைத்தலைவலி உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்ய கூடாது.
English Summary
Surya muthra for health care