சுவையான தக்காளி குருமா.! செய்வது எப்படி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

வெங்காயம் பெரியது - ஒரு கிலோ
தக்காளி நன்கு பழுத்தது - அரை கிலோ
முழு தேங்காய் - துருவியது
பட்டை, 
கிராம்பு, 
ஏலக்காய், 
அண்ணாச்சி பூ, 
ஏலம், சோம்பு
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - ஒரு குழி கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை - தேவைக்கு ஏற்ப

thakkali guruma, seithipunal

செய்முறை:

வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும். தேங்காயை நன்கு மசிய அரைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மசாலா வகைகளைப் போட்டு நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி போல் வதக்கவும். 

இதில் தக்காளி சேர்த்து மீதம் உள்ள உப்பையும் சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மூடி நன்கு கொதிக்கவிடவும். 

பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இதில் முட்டை உடைத்து ஊற்றி முட்டை குருமாவாக வைத்து சாதத்துடன் சாப்பிடலாம். இல்லை முட்டை வேக வைத்து இதில் போட்டு சாதத்துடன் சாப்பிடலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare thakkali guruma in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->