மாலைநேர ஸ்நாக்ஸ்.. நறுக்கென செய்யலாம்.. பீட்ரூட் காராசேவ்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 2
அரிசி மாவு - அரை கப்
கடலை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
ஓமம் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு. 

செய்முறை:

பீட்ரூட்டைத் தோல்சீவி நறுக்கி அதனை வேகவைத்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். 

ஒரு பாத்திரத்தில்  அரிசி மாவு, கடலை மாவு மற்றும் ஓமம் உள்ளிட்டவற்றை சேர்த்து கலந்துகொள்ளுங்கள். 

இத்துடன் வைத்துள்ள பீட்ரூட் விழுதை போட்டு முறுக்கு மாவு பதத்திற்குப் பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், மாவை அச்சில் போட்டு சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்க வேண்டும். 

சத்தான பீட்ரூட் சேவ் தயார்.! இதைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.      


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare beetroot karasev in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->