மாலை நேரத்துக்கு ஏற்ற கேரட் தக்காளி சூப்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான கேரட் தக்காளி சூப் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கேரட் - 4

தக்காளி - 2

பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகு தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கரம் மசாலா தூள் - சிறிதளவு

வெண்ணெய் 

கொத்தமல்லி இலை

செய்முறை:

முதலில் கேரட்டை தோல் சீவி, துருவிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்துக் கொண்டு, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும் பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு அதில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு சூப்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாறவும். அவ்வளவுதாங்க ஈஸியான கேரட் தக்காளி சூப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Tomato carrot soup


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->