டேஸ்டியான நெய் அப்பம்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான நெய் அப்பம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 250 கிராம் 

தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்

ஏலக்காய் - 4 

சமையல் சோடா -1/4 தேக்கரண்டி 

வாழைப்பழம் - 1 

வெல்லம் - 200 கிராம் 

நெய் 

செய்முறை:

முதலில் பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு வாழைப்பழத்தின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 

பிறகு ஊறவைத்த அரிசியுடன் வாழைப்பழம், ஏலக்காய் சேர்த்து மிக்சியில் சிறிது கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். 

பின்பு அதில் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும். 

பிறகு குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றவும். 

பின்பு குழிகளில் மாவை ஊற்றி, அப்பத்தின் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை நன்றாகப் பொரித்தெடுத்தால் டேஸ்டியான நெய் அப்பம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Nei appam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->