சுவையான தேங்காய் பால் ரவா கேசரி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான தேங்காய்ப் பால் ரவா கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

ரவை -1 கப்

தேங்காய்ப் பால் - 2 கப்

தண்ணீர் -1 கப்

சர்க்கரை -1 1/2 கப்

நெய் -1/4 கப்

எண்ணெய் - தேவையான அளவு

முந்திரி8

ஆரஞ்சு கலர் -1 சிட்டிகை

செய்முறை:

முதலில் கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் ரவையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கப் தேங்காய்ப் பாலுடன் தண்ணீர் கலந்து சூடாக்கவும். பிறகு அதில் ரவையை கொட்டி நன்கு கிளறவும். பின்பு ஒரு கொதி வந்தவுடன் மீதமுள்ள ஒரு கப் தேங்காய்ப் பால், கலர் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு கேசரி பதம் வந்த பிறகு, வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்தால் சுவையான தேங்காய்ப் பால் ரவா கேசரி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coconut milk rava kesari


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->