பன்னீரில் இவ்வளவு நன்மைகளா? - வாங்க பார்க்கலாம்.!    - Seithipunal
Seithipunal


பால் வைத்து செய்யப்படும் பொருட்களில் ஒன்று பன்னீர். இதில், பல வகையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
இப்படி பல சத்துக்களைக் கொண்டுள்ள பன்னீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

* கால்சியம் சத்து பன்னீரில் அதிகமாக காணப்படுவதால் இதை சாப்பிடுவதன் மூலம் எலும்புகளை பலப்படுத்துகிறது.

* பன்னீரில் மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* பேலியோ டயட் முறையின் மூலம் உடல் எடையை குறைப்பவர்களுக்கு பன்னீர் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

* அதிகளவு புரதச்சத்து நிறைந்த பன்னீரை சாப்பிடுவதன் மூலம் தோலில் பளபளப்பையும், முடி உதிர்தல், தலையில் வறட்சி போன்ற பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துகிறது.

* ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் மேலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவதற்கு பன்னீர் பெரிதும் உதவி புரிகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை பன்னீர் உடலுக்கு தருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of panneer


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->