சரும சுருக்கங்கள் போக இனி இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துங்கள்..!! - Seithipunal
Seithipunal


வயதானல் ஏற்படும் சரும சுருக்கங்களை வீட்டிலேயே சரி செய்ய சில டிப்ஸ்.

வயதானால் சரும சுருக்கங்கள் ஏற்படும் இவற்றை  சரிசெய்ய பீற்றூட்டை பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் பி, சி உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன இதனால் சருமத்திற்கு நல்ல பலனை அளிக்கும்.

 வறண்ட சருமத்திற்கு: ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு, பாதாம் பால், பால் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். பின்பு அதனுள் பிரஸை முக்கி முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் வறண்ட சருமம், பளபளப்புடன் காட்சியளிக்க தொடங்கிவிடும்.

வயதான சருமத்திற்கு: பீட்ரூட்டை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தேனை கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.

 முகம் பிரகாசமாகவும், இளமையாகவும்  மிளிற பீட்ரூட் பேஸ்பேக் உதவும். உங்கள் முகத்திற்கு இந்த பேஸ்பேக் ஒவ்வாமை ஏற்படுத்துமா என சோதித்தும் பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beetroot For skin glow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->