இன்றைய ஸ்பெஷல் : சுவையான ஆப்பம் செய்வது எப்படி?  - Seithipunal
Seithipunal


சுவையான ஆப்பம் செய்வது எப்படி?

ஆப்பம் இலங்கை, இந்தியாவில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது அரிசி மாவிலே செய்யப்படுகின்றது. இது எளிமையாக சமைக்கப்படுகிறது. குறிப்பாக இரவு உணவாக சமைக்கப்படுகிறது. ஆப்பம் வெள்ளை ஆப்பம், பால் ஆப்பம், முட்டை ஆப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.

ஆப்பம் சுடுவதற்கான பாத்திரம் ஆப்பச்சட்டி எனப்படுகிறது. ஆப்பம் அது சுடப்படும் ஆப்பச்சட்டியின் வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் ஆப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டு சுடும்போது முட்டை ஆப்பமும், சிறிதளவு தேங்காய் பால் விட்டு சுடும்போது பால் ஆப்பமும் கிடைக்கின்றன.

தினமும் காலையில் இட்லி, தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் ஆப்பம்.

தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான ஆப்பம் ஊற்றி காலையில் கொடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள். ஆப்பம் தயார் செய்வது எப்படி? என்று பார்ப்போம் வாருங்கள்.

ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்: 

இட்லி அரிசி - 1 கப்

பச்சரிசி - 1 கப் 

உளுத்தம் பருப்பு - 1/4 கப் 

தேங்காய் - 1/2 மூடி 

வெந்தயம் - 2 ஸ்பூன் 

சமைத்த சாதம் - 1/4 கப் 

உப்பு - தேவையான அளவு

ஆப்பம் செய்முறை : 

முதலில் இட்லி அரிசி மற்றும் பச்சரிசியினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோன்று உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றினை ஒரு பாத்திரத்தில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊறவைத்த உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தினை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அது நன்றாக அரைந்தவுடன் அதனுடன் ஊறவைத்த அரிசியினையும் கொட்டி அரைக்கவும்.

பிறகு அதனுடன் தேங்காய் மற்றும் சமைத்த சாதம் போன்றவைகளையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இப்போது அரைத்த மாவினை ஒரு கிண்ணத்தில் ஊற்றி 8 மணிநேரம் அதை புளிக்க வைக்க வேண்டும். எட்டு மணிநேரம் கழித்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தற்போது ஆப்பம் செய்ய தேவையான மாவு தயாராகிவிட்டது.

இப்போது ஆப்ப கடாயை நன்றாக சூடாக்க வேண்டும். கடாயில் எண்ணெய் தடவிவிட்டு பிறகு ஆப்பம் ஊற்ற வேண்டும். மேலே மூடி போட்டு தான் வேக வைக்க வேண்டும்.

ஆப்பம் எப்படி ஊற்ற வேண்டும் என்று, பல பேருக்கு தெரிந்திருக்கும். ஆப்ப கடாயில் ஊற்றும் போது மாவு கொஞ்சம் தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.

இப்படி செய்யும்பட்சத்தில் சுவையான ஆப்பம் எந்த ஒரு சோடா உப்பு சேர்க்காமல் சாஃப்ட்டாக வரும். உங்களுக்கு பிடித்தமான குழம்போடு இந்த ஆப்பத்தை பரிமாறி பாருங்கள்... இதன் சுவை பிரமாதம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

appam preparation in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->