பெண்கள் கழிவறைக்குள் கேமரா.! பர்தாவுடன் சிக்கிய இன்ஜினியர்.! - Seithipunal
Seithipunal


பெண்கள் கழிவறைக்குள் கேமரா.! பர்தாவுடன் சிக்கிய இன்ஜினியர்.!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியின் இன்ஃபோபார்க்கில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் அபிமன்யு. இவர் லூலூ மாலில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் பர்தா அணிந்த படி நுழைந்துள்ளார். 

அங்கு அவர் தனது தொலைபேசியை சிறிய அட்டைப் பெட்டியில் வைத்து, கேமராவில் காட்சிகளை பதிவு செய்ய ஒரு துளையினைப் போட்டு, அதனை கழிப்பறையின் வாசலில் மாட்டியுள்ளார்.

அதன் பின்னர் அபிமன்யு அங்கிருந்து வெளியே வந்து வாஷ்ரூம் அருகே உலாவிக் கொண்டிருந்துள்ளார். அபிமன்யுவின் நடத்தை சந்தேகப்படும் வகையில் இருந்ததால், இதைக் கவனித்த பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். 

அதன் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் பெண் வேடமிட்டு, கழிவறையில் செல் போனில் பெண்களை படம்பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அபிமன்யுவின் பர்தா மற்றும் செல்போனை பறிமுதல் செய்து, மேலும், அவர் இதுபோன்ற செயல்களை வேறு எங்கும் செய்திருக்கிறாரா? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for fit camera at womans toilet in kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->