காதலருக்காக தேர்வு எழுதிய காதலி..! - Seithipunal
Seithipunal


இரட்டையர்கள் ஒரே மாதிரி இருப்பதினால் ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் தேர்வெழுதும் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் குஜராத் மாநிலத்தில் தனது காதலனுக்காக தானே தேர்வு எழுத முயற்சித்து உள்ளார் ஒரு காதலி.

இந்த சம்பவமானது  குஜராத்தின் 'வீர் நர்மத் தெற்கு குஜராத்'  பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. 24 வயது பி.காம் முடித்த ஒரு அரசு வேலையில் இருக்கும் அந்த பெண் தனது காதலன், யுனிவர்சிட்டி தேர்வுகளுக்கு சரியாக படிக்காத காரணத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

 மேலும் உத்தரகாண்டிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்த தனது காதலனுக்காக அந்த பெண் கல்லூரியில் அவருக்காக தேர்வெழுதி எப்படியேனும் தனது காதலனை தேர்ச்சி பெற செய்ய, ஹால் டிக்கெட்களில்  உள்ள விவரங்களை மாற்றியமைத்து தேர்வு எழுத முயன்றிருக்கிறார்.

மேலும் தேர்வெழுத முயற்சிக்கையில் அந்த தேர்வு கண்காணிப்பாளர்க்கு சந்தேகம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து அந்த பெண்ணை விசாரித்ததில் அந்த பெண்ணின் ஆள் மாறாட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுப் போன்ற சட்டவிரோத செயலுக்கு தண்டனையாக அந்த காதலனுக்கு 3 ஆண்டுகள் தேர்வு எழுத பல்கலைகழகம் அனுமதி ரத்து செய்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் பி.காம் பட்டததையும் பல்கலைக்கழகம் திரும்ப பெற செய்ததையடுத்து அவர் அரசு வேலையில் இருப்பதால் அந்த வேலையும் பறிப்போகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Write a exam for lover


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->